×

ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி

ஆவடி: அம்பத்தூர் தொழிற்பேட்டை புளியமரம் பஸ் நிறுத்தத்தில் தனியார் வங்கி ஏடிஎம் உள்ளது. இங்கு காவலாளி கிடையாது. நேற்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் மையத்தில் புகுந்து எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து ஹைதராபாத்தில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் உடனடியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசாரை தொடர்பு கொண்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதனை பார்த்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர், போலீசாரும், வங்கி அதிகாரிகளும் உள்ளே சென்று பார்த்தபோது, ஏடிஎம் எந்திரத்தில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், அதில் இருந்த பணத்தை கொள்ளை அடிக்க முடியாமல் மர்ம நபர் தப்பிச்சென்றது தெரியவந்தது.

Tags : robbery ,ATM , Attempted robbery at ATM
× RELATED கடைகளில் கொள்ளை