×

கூடங்குளம் அணுமின் நிலைய உதவி மேலாளர் மாயம்

நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சினேகன் சக்ரபோதி (35) உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 9ம் தேதி வேலைக்கு சென்ற சினேகன் சக்ரபோதி மறுநாள் முதல் வேலைக்கு வரவில்லை. உடன் பணியாற்றிய அதிகாரிகள் அவரது குடியிருப்பில் சென்று பார்த்த போது அங்கு அவர் இல்லை. பல இடங்களில் தேடி பார்த்தும், அவரது சொந்த ஊருக்கு தகவல் தெரிவித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து கூடங்குளம் போலீசில், அணுமின் நிலைய மேலாளர் அமிர்தவள்ளி நேற்று முன்தினம் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான கூடங்குளம் அணுமின் நிலைய உதவி மேலாளர் சினேகன் சக்ரபோதியை தேடி வருகின்றனர்.


Tags : Assistant Manager ,Koodankulam Nuclear Power Station ,Magic , Koodankulam Nuclear Power Station Assistant Manager Magic
× RELATED நர்ஸ் மாயம்