×

கொரோனா தொற்று தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் தமிழக மக்களுக்கு இலவசமாக போடப்படும்: தடுப்பூசி குறித்து பீகார் பாஜ தேர்தல் அறிக்கை வெளியான ஒரு மணி நேரத்தில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

புதுக்கோட்டை: பீகார் மாநில தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என்று பாஜ தேர்தல் அறிக்கை வெளியான ஒரு மணி நேரத்தில் கொரோனா தொற்று தடுப்பூசி கண்டுபிடித்தவுடன், தமிழக மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு‘ கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டி: குடிமராமத்து திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் 23 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

நிகழாண்டில் 38 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.புதுக்கோட்டையில் புதிதாக அரசு பல் மருத்துவக்கல்லூரி விரைவில் தொடங்கப்படும்.  கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும். கல்லணைக் கால்வாய் சீரமைப்புக்காக சுமார் ரூ.2,600 கோடியில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் அனுமதி பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பீகார் மாநில தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என்று பாஜ தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான ஒரு மணிநேரத்தில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழகத்தில் அனை வருக்கும் இலவசமாக போடப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona ,Edappadi ,Tamil Nadu ,BJP ,Bihar ,release , Corona vaccine will be given free to the people of Tamil Nadu as soon as it is discovered: Chief Minister Edappadi's announcement an hour after the release of the Bihar BJP election manifesto on the vaccine
× RELATED எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் வாக்கு...