×

பெரம்பலூர் அருகே ஏரியில் கண்டெடுப்பு: டைனோசர் முட்டைகளா என அதிகாரிகள் இன்று ஆய்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு பள்ளிக்கு அருகேயுள்ள ஏரியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. ஏரியில் மண் எடுக்க தோண்டியபோது, பல்வேறு அளவுகளில் டைனோசர் முட்டைகளை போன்று கண்டெடுக்கப்பட்டது. இவை டைனோசர் முட்டைகளின் படிமங்கள் என்று தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த முட்டைகள் குறித்து துபாயில் வாழும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுநர் நிர்மல்ராஜா தெரிவிக்கையில், ‘குன்னம் பகுதியில் உள்ள படிமப்பாறைகள், 9-10 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கிரிடேஷியஸ் காலத்தில் கடலின் ஆழத்தில் 100 மீட்டர் இருக்கும் பொழுது உருவானவை. பல வருட ஆராய்ச்சியில் அங்கு டைனோசர் முட்டைகள் எங்கும் கிடைத்ததில்லை. நானும் பலமுறை அங்கு சென்றுள்ளேன்.

 ஒரு முறை கூட கண்டதில்லை. அவை அனைத்தும்  படிமப்பாறைகள் உருவாகும் பொழுது ஒரு இடத்தில் ஒரு சிறிய தொல்லுயிர் எச்சமே’ என்றார். குன்னம் தாசில்தார் சின்னதுரையிடம் கேட்டபோது, ‘குன்னம் ஏரியில் குடி மராமத்து பணியின் போது கண்டறியப்பட்ட உருண்டை வடிவ படிமங்கள் என்னவென்று முழுமையாக தெரியவில்லை. இதுபற்றி விவரம் அறிய திருச்சி மியூசியத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று குன்னம் வந்து நேரில் ஆய்வு செய்கின்றனர் என்று தெரிவித்தார்.

Tags : lake ,Perambalur , Discovery in a lake near Perambalur: Authorities today inspected dinosaur eggs
× RELATED காக்களூர் ஏரியில் ஆக்கிரமிப்பு; வீடு, கடைகள் அதிரடி அகற்றம்