×

மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் கண்டன போராட்டம்

காஞ்சிபுரம்: தொழிலாளர் சட்டங்களை நசுக்கி, உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் காஞ்சிபுரம் வணிகர் வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தொமுச நிர்வாகி பொன்னுராம் தலைமை தாங்கினார். சிஐடியு நிர்வாகி மதுசூதனன், ஏஐடியுசி மூர்த்தி, ஐஎன்டியுசி குமார், ஏஐசிசிடியு ஏ.குமார், எல்டியுசி ராஜேஷ், எச்எம்எஸ் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு முத்துக்குமார், நந்தகோபால், எல்பிஎப் சுந்தரவரதன், இளங்கோவன், ஐஎன்டியுசி இராம.நீராளன், ஏஐசிசிடியு முருகன், எல்டியுசி ராஜகுரு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி, ரயில்வேயை தனியார்மயமாக்கக்கூடாது. கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு மாதம் 7500 வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும். கைத்தறி, ஆட்டோ, அப்பளம், தையல் மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கு நிறுத்திய பென்ஷனை வழங்க வேண்டும். நலத்திட்ட உதவிகளை அமல்படுத்த வேண்டும், தொழிலாளர் சட்டங்களை நசுக்கி, தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டனர். தொமுச நிர்வாகிகள் ரவி, அரசு, சுதாகரன், சசிகுமார், வெங்கடேசன், தமிழ்ச்செல்வன், மதியழகன் உள்பட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags : unions ,government , All the unions condemned the federal government and proteste
× RELATED போனஸ் வழங்காததை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்