×

கூடுவாஞ்சேரி அருகே பரிதாபம்: திடீர் தீ விபத்தில் தாய் மகன் உடல் கருகி பரிதாப பலி

கூடுவாஞ்சேரி: திடீர் தீ விபத்தில் தாய், மகன் உடல் கருகி பலியானார்கள்.  கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர், துலுக்கானத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (40). இவரது மனைவி நிஷாஏஞ்சல் (30). இவர்களது மகன் டேனியல் (6). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் மூர்த்தி, பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து நிஷா ஏஞ்சல், மகனுடன், ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை நிஷா, மகன் டேனியலுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். திடீரென அவரது வீட்டில் இருந்து கரும்புகை வந்ததை பார்த்து, அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே, அங்கு சென்று வீட்டின் கதவை தட்டியபோது, உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.

பின்னர், கடப்பாரையால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தாயும், மகனும் உடல் கருகி சடலமாக கிடந்தனர். தகவலறிந்து கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலங்களை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிஷா ஏஞ்சல், மகனுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என தீவிரமாக விசாரிக்கின்றனர். திருப்போரூர்: திருப்போரூரை அடுத்த திருநிலை கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (35). ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் செல்வகுமார், வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். சிட்கோ தொழிற்பேட்டை நுழைவாயில் அருகே ஓஎம்ஆர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பைக், சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரியின் பின்புறம் மோதியது. இதில், படுகாயமடைந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Guduvancheri ,death ,fire accident , Tragedy near Guduvancheri: Mother and son burnt to death in a sudden fire accident
× RELATED குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் பலி: ஆவடி அருகே சோகம்