×

குற்ற சம்பவங்களை ஒடுக்கும் வகையில் தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் குற்ற சம்பவங்களை ஒடுக்குவதற்காக ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ரவுடிகள் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு, ‘‘ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது. இது போன்ற சம்பவங்களால் பாதிக்கப்படுவோர் குடும்பத்திற்கு அரசியல் கட்சிகள் உதவ வேண்டும்.  ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். ரவுடிகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டி.ஜி.பி., 2 வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், தமிழகத்தில் குற்றச்சம்பவங்களை ஒடுக்க ரவுடிகளை ஒழிக்க புதிய சட்ட வரைவு மசோதா, குழுவின் மூலம் தயாரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார்.  இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் புதிய சட்ட வரைவு மசோதா எப்போது சட்டமன்றத்தில் வைக்கப்பட உள்ளது என்று பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை தேதியை குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.

Tags : Tamil Nadu , New law to eradicate rowdies in Tamil Nadu to curb crime: New law to eradicate rowdies in Tamil Nadu to suppress crime
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...