×

புதுவையில் ஒரே நாளில் 489 பேருக்கு தொற்று

புதுச்சேரி: புதுச்சேரி, சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் கூறியதாவது: புதுச்சேரியில் நேற்று 5,153 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 489 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 525 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 28,024 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 22,505 பேர் (80.31 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : In Puduvai, 489 people were infected in a single day
× RELATED 7 மாதங்களுக்கு பின் புதுவையில் தனியார் பஸ்கள் இயக்கம்