×

முன்விரோத தகராறில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு: கும்பலுக்கு வலை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பாப்பன்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் சேகர்(38) மற்றும் சுரேஷ்(36). நண்பர்கள் இருவரும் நேற்று  மாலை அந்தப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சராமரியாக வெட்டி தப்பினர். இதில் இருவருக்கும் உடலில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, புகாரின்பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசதர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான  உள்ள 3 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடுகின்றனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் முன்விரோதத்தால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : teenagers ,gang , Sickle cut for 2 teenagers in a premeditated dispute: web for gang
× RELATED உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு