×

மாநிலங்களில் தனி சட்டம்: சோனியா அறிவுறுத்தல்

காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில், அரசியலமைப்பின் 254 (2)வது பிரிவின் கீழ், மாநிலத்தின் அதிகார வரம்புக்குட்பட்டு, வேளாண் சட்டங்களை தவிர்க்க, தங்கள் மாநிலங்களில் சட்டங்களை இயற்றுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும்படி, காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார். மேலும், இது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் விவசாய பொருட்களை சந்தைபடுத்தும் சட்டத்தை சீர்குலைக்கவும், குறைந்தபட்ச ஆதரவு விலை ஒழிக்கவும் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களை மாநிலங்கள் தவிர்ப்பதற்கு உதவும். இது மோடி அரசு, பாஜ விவசாயிகளுக்கு இழைத்துள்ள அநீதியில் இருந்து அவர்களை விடுவிக்கும்,” என்று கூறப்பட்டுள்ளது.


Tags : states ,Sonia , Separate law in states: Sonia's instruction
× RELATED சட்டக்கல்வி நுழைவு தேர்வில்...