×

நடுக்கடலில் மாரடைப்பால் உயிரிழப்பு: மீனவர் உடலை டிரைசைக்கிளில் வைத்து எடுத்துச் சென்ற அவலம்

கடலுக்கு மீன்பிடிக்க சென்று திரும்பிய ராமேஸ்வரம் மீனவர் வழியில் நெஞ்சுவலியால் இறந்ததார். மீன்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், அவரது உடலை டிரை சைக்கிளில் வைத்து மீனவர்கள் எடுத்துச் சென்ற சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் ராமேஸ்வம் வேர்கோடு பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜூக்கு சொந்தமான படகில் மீனவர்கள் ஜனதன், தங்கப்பாண்டி, நம்பு முனீஸ்வரன், வசீகரன், ஆனந்த்பாலன், நேவிஸ் மற்றும் தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டினம் பகுதியை சேர்ந்த இருதயராஜ் (32) ஆகியோர் சென்றனர். இரவு முழுவதும் கடலில் மீன்பிடித்து நேற்று காலை கரை திரும்பினர். அப்போது நடுக்கடலில் மீனவர் இருதயராஜூக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் படகில் இருந்த மற்ற மீனவர்கள் படகை வேகமாக கரைக்கு ஒட்டி வந்தனர்.

ஆனால் வரும் வழியில் இருதயராஜ் மாரடைப்பு ஏற்பட்டு படகிலேயே இறந்தார். இதனிடையே கரையை வந்தடைந்த மீனவர்கள் நடந்த சம்பவம் குறித்து படகு உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். இருதயராஜ் உறவினர்கள் மற்றும் மரைன் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மரைன் போலீசார் மற்றும் மீன்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால், உயிரிழந்த மீனவர் இருதயராஜ் உடலை சக மீனவர்கள் டிரை சைக்கிளில் வைத்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது பரிதாபமாக இருந்தது. நடுக்கடலில் நடந்த சம்பவம் குறித்து மீன்துறை அதிகாரிகள் மற்றும் மரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Death ,fisherman ,Mediterranean , Fisherman, heart attack
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...