×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை 40 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 18 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதேபோல், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் நேற்று முன்தினம்  35 ஆயிரம் கனஅடியாக இருந்தது, நேற்று 27,077 கன அடியாக குறைந்தது. டெல்டா பாசனத்திற்கு 20 ஆயிரம் கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 850 கனஅடியும் திறக்கப்படுகிறது. திறப்பை விட வரத்து அதிகமிருப்பதால் நீர்மட்டம் நேற்று  காலை 100.02 அடியாக சற்று உயர்ந்தது. நீர் இருப்பு 64.86 டி.எம்.சி. உள்ளது.

Tags : Mettur Dam , Water level decline at Mettur Dam
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: தற்போதைய நீர்மட்டம் 100 அடி