×

ஒரேநாளில் 5,679 பேர் பாதிப்பு: தமிழகத்தில் இதுவரை 9,148 பேர் உயிரிழப்பு: மொத்த பாதிப்பு 5,69,370 ஆக உயர்வு

சென்னையில் 1,60,926 பேர் பாதிப்பு, இறப்பு 3,128

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 5,679 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று 72 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை சிகிச்சை பலனின்றி 9,148 பேர் உயிரிழந்துள்ளனர். ெசன்னையில் 1,60,926 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 3,128 பேர் மரணமடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் இதுவரை 5,69,370 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவருகிறது. ஒரு மாதத்தில் தினசரி கொரோனா தொற்று இதே நிலையில் தான் உள்ளது. ஆனால் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. தற்போது தினசரி 60 முதல் 80 பேர் மட்டுமே மரணம் அடைகின்றனர். இதன்படி தமிழகத்தில் நேற்று மட்டும் 72 பேர் மட்டுமே மரணம் அடைந்துள்ளனர். புதிதாக 5,679 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து மொத்த பாதிப்பு 5.69 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று 5,626 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக சுகாராத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 94,877 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 5,679 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 1,193 பேர், அரியலூர் 28, செங்கல்பட்டு 277, கோவை 661, கடலூர் 235, தருமபுரி 148, திண்டுக்கல் 58, ஈரோடு 151, கள்ளக்குறிச்சி 57, காஞ்சிபுரம் 165, கன்னியாகுமரி 86, கரூர் 49, கிருஷ்ணகிரி 104, மதுரை 71, நாகப்பட்டினம் 35, நாமக்கல் 115, நீலகிரி 137, பெரம்பலூர் 17, புதுக்கோட்டை 66, ராமநாதபுரம் 17, ராணிப்பேட்டை 65, சேலம் 297, சிவகங்கை 46, தென்காசி 53, தஞ்சாவூர் 150, தேனி 66, திருப்பத்தூர் 67, திருவள்ளூர் 229, திருவண்ணாமலை 173, திருவாரூர் 139, தூத்துக்குடி 46, நெல்லை 77, திருப்பூர் 158, திருச்சி 107, வேலூர் 125, விழுப்புரம் 162, விருதுநகர் 42 என 5,671 பேரும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 8 என சேர்த்து 5,679 பேருக்கு நேற்று தொற்று உறுதி ெசய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 69 ஆயிரத்து 370 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 3,455 பேர் ஆண்கள், 2,224 பேர் பெண்கள், ஒரு திருநங்கை என தற்போது வரை 3 லட்சத்து 43 ஆயிரத்து 470 ஆண்கள், 2 லட்சத்து 25 ஆயிரத்து 870 பேர் பெண்கள், 30 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 5,626 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 5 லட்சத்து 13 ஆயிரத்து 836 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 46 ஆயிரத்து 386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 72 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 35 பேரும், அரசு மருத்துவமனையில் 37 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் 18 பேர், செங்கல்பட்டு 4, கோவை 6, கடலூர் 1, தருமபுரி 1, திண்டுக்கல் 1, ஈரோடு 1, கள்ளக்குறிச்சி 1,  காஞ்சிபுரம் 2, கிருஷ்ணகிரி 3, மதுரை 2, புதுக்கோட்டை 2, சேலம் 8, சிவகங்கை 1, ெதன்காசி 1, தஞ்சாவூர் 2, திருவள்ளூர் 3, திருவண்ணாமலை 3, திருவாரூர் 1, திருப்பூர் 4, வேலூர் 7 என மொத்தம் 72 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,148 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டத்தில் மட்டும் 4,504 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இதுவரை 9,148 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் 24 மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 3,128, செங்கல்பட்டு 535, கோவை 408, கடலூர் 214, திண்டுக்கல் 157, காஞ்சிபுரம் 306, கன்னியாகுமரி 217, மதுரை 383, புதுக்கோட்டை 128, ராமநாதபுரம் 118, ராணிப்பேட்டை 153, சேலம் 298, சிவகங்கை 118, தென்காசி 132, தஞ்சாவூர் 161, தேனி 173, திருவள்ளூர் 535, திருவண்ணாமலை 219, தூத்துக்குடி 120, நெல்லை 196, திருப்பூர் 114, திருச்சி 142, வேலூர் 221, விருதுநகர் 209 என 8,385 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 4,504 பேர் உயிரிழந்துள்ளனர்.

13 மாவட்டத்தில் மட்டும் 762 பேர் உயிரிழப்பு
அரியலூர் 38, தருமபுரி 24, ஈரோடு 79, கள்ளக்குறிச்சி 95, கரூர் 37, கிருஷ்ணகிரி 56, நாகப்பட்டினம் 77, நாமக்கல் 64, நீலகிரி 23, பெரம்பலூர் 20, திருப்பத்தூர் 85, திருவாரூர் 69, விழுப்புரம் 95 பேர் என 13 மாவட்டத்தில் மட்டும் 762 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


Tags : deaths ,Tamil Nadu , 5,679 casualties in one day: 9,148 deaths in Tamil Nadu so far: Total casualties rise to 5,69,370
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...