×

கூகுள் பே ஆப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர் தகவலை பகிர்ந்து கொள்ளவில்லை: நீதிமன்றத்தில் பதில் மனு

புதுடெல்லி : ‘கூகுள் பே’ ஆப்பை பயன்படுத்தும் மக்களின் பணப் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை,’ என்று  கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கி அனுமதியின்றி ‘கூகுள் பே’ பணப் பரிவர்த்தனைகளைக் கையாள்கிறது என்றும், வாடிக்கையாளர்களின் தகவல்களை மூன்றாம்  நபர்களுடன்அது பகிர்ந்து கொள்கிறது என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் தொடரப்பட்டது.

இதற்கு விளக்கம் அளித்து கூகுள் பே  நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், ‘வாடிக்கையாளர்களின் தகவல்களை மூன்றாம் தரப்பிடம் பகிர்ந்து  கொள்வதற்கு, எங்கள் நிறுவனம் அனுமதி கேட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருப்பது தவறானது. மேலும், இந்திய தேசிய பணப்பட்டுவாடா  வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டே, ‘யுபிஐ’ நடைமுறைப்படியே கூகுள் பே மூலமாக பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது. எனவே, இதில் எந்த  விதிமுறை மீறல்களும் இல்லை,’ என்று கூறப்பட்டுள்ளது.



Tags : Google ,court , Using the Google Pay app Customer information Not shared: Reply petition in court
× RELATED ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் வாலட் இந்தியாவில் அறிமுகம்