×

ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 1.30 முதல் 2.80 வரை உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 1.30 முதல் 2.80 வரை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் சஜ்ஜன்சிங் ரா சவான் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:எண்ணெய் நிறுவனங்களால் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விற்பனை விலையை உயர்வு செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் சென்னை நகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் நியாய விலை கடைகளில் வருகிற அக்டோபர் 1ம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் மண்ணெண்ணெய் சில்லறை விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 15 முதல் அதிகபட்சமாக 16.50 வரை உயர்த்தி நிர்ணயம் செய்ய உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது ரேஷன் கடைகளில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 13.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை ஏற்றத்தின்படி 15 முதல் 16.50 வரை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காரணம், ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் கொள்முதல் செய்யும் தூரத்துக்கு தகுந்தபடி விலை நிர்ணயம் வைத்து விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.குடும்பத்தில் காஸ் சிலிண்டர் இல்லை என்றால் தலா 3 லிட்டர் எண்ெணண்ணெயும், ஒரு காஸ் சிலிண்டர் இருந்தால் 2 லிட்டரும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. புதிய கார்டு பெற்றவர்களுக்கு மண்ணெண்ணெய் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : ration shops ,Government of Tamil Nadu , Ration store kerosene prices 1.30 to 2.80 per liter increase: Government of Tamil Nadu
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...