×

முதல் வெற்றி யாருக்கு? : கொல்கத்தா-ஐதராபாத் இன்று மோதல்

அபுதாபி: நடப்பு சீசனில் முதல் வெற்றியை பெறும் முனைப்பில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று களம் காணுகின்றன.
அபுதாபியில்  இன்று நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் 8வது போட்டியில் கொல்கத்தா நைட்  ரைடர்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடு உள்ளன. இரண்டு அணிகளும்  இதுவரை தலா ஒரு போட்டியில் விளையாடி உள்ளன. கொல்கத்தா அணி தனது முதல்  போட்டியில் மும்பையிடம் 49ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.  அதேபோல் ஐதராபாத் அணியும் பெங்களூர் அணியிடம் 10 ரன் வித்தியாசத்தில்  தோற்றது.

ஐபிஎல் தொடங்கி ஒரு வாரம் முடிந்த நிலையில் இன்னும்  வெற்றிக் கணக்கை தொடங்காத அணிகளாக கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் மட்டுமே  இருக்கின்றன. புள்ளிப் பட்டியலில் கடைசி 2 இடங்களில் இரண்டு அணிகளும்  உள்ளன. அதனால் இன்றைய போட்டியில் வெற்றிப் பெற்று வெற்றி கணக்கை தொடங்கும்  தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தாவும், டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணிகள் முயற்சி செய்யும்.  கூடவே  யுஏஇயில் நிலவும் கடுமையான வெப்பத்துடனும் வீரர்கள் போராட வேண்டி இருக்கும்.Tags : Kolkata ,clash ,Hyderabad , Who won first? : Kolkata-Hyderabad clash today
× RELATED ஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தா அணிக்கு...