×

கஜ வாகனத்தில் அருள்பாலித்த ஏழுமலையான்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கடந்த 19ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவத்தின் 6ம் நாளான நேற்று காலை மலையப்ப சுவாமி, ஸ்ரீராமர் அலங்காரத்தில் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழக்கமாக, பிரமோற்சவத்தின் 6ம் நாள் மாலை 4 மணிக்கு தங்க ரதம் வீதியுலா நடைபெறும். ஆனால், கொரோனா காரணமாக இந்த வீதியுலா ரத்து செய்யப்பட்டது. இதனால், சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார். அதேபோல், இரவு உற்சவத்தில் கஜ வாகனத்தில் அருள்பாலித்தார். ரூ.200 கோடியில் ஓய்வறை: திருப்பதிக்கு வரும் கர்நாடக பக்தர்களுக்காக கர்நாடகா அரசு ரூ.200 கோடியில் 242 ஓய்வறைகளை கட்டுகிறது. இதற்கான அடிக்கல்லை கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனும் கலந்து கொண்டு நாட்டினர். முன்னதாக இருவரும், ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Ezhumalayan , Ezhumalayan blessed in Gaja vehicle
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்க...