×

திண்டிவனம் தொகுதி தி.மு.க எம்எல்ஏவுக்கு கொரோனா

திண்டிவனம்:  திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க.வை சேர்ந்த சீதாபதி சொக்கலிங்கத்துக்கு கடந்த 3 தினங்களாக காய்ச்சல் இருந்ததால் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதியானது. இதையடுத்து அவர் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனைதொடர்ந்து அவரது கணவர் ஒலக்கூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாங்கை சொக்கலிங்கத்துக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  இதேபோல், கன்னியாகுமரியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சைமாலுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.Tags : Corona ,constituency ,Tindivanam ,DMK MLA , Corona to Tindivanam constituency DMK MLA
× RELATED திருப்போரூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா