×

நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 8 எம்.பி.க்களுக்காக டீ கொண்டு வந்தார் மாநிலங்களவை துணை தலைவர்!!

டெல்லி : நாடாளுமன்ற வளாகத்தில் 2வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள 8 எம்.பி.க்களுக்காக மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் டீ கொண்டு வந்தார். மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார். டெரிக் ஓ பிரையன் கே.கே.ராஜேஷ், ராஜீவ் சத்வவ், ரிபுன் போரா, டோலா சென், சையது நாசர் உசேன், சஞ்சய் சிங், எளமறம் கரீம் ஆகியோர் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது. சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து விடிய விடிய எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2வது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Vice President ,MPs ,State Council ,premises ,Parliament ,struggle ,Tarna , Ration shop, vending machine, ration item
× RELATED தலைவருக்கு தெரிவிப்பதுபோல் துணை...