×

சென்னை உயர்நீதிமன்றத்தில் 5.70 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது: மத்திய சட்டத்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தில் 5.70 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என மத்திய சட்டத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் சுமார் 11.57 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் 51,52,921 வழக்குகள் நிலுவையில் உள்ளது. 36,77,089 சிவில் வழக்குகளும், 14,75,832 கிரிமினல் வழக்குகளும் நிலுவையில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.


Tags : Chennai High Court ,Central Law Ministry , 5.70 lakh cases pending in Chennai High Court: Central Law Ministry
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...