×

‘அண்ணி’ அப்பளம் சாப்பிட்டா கொரோனா வராதா? : பாஜ அமைச்சரை கிண்டலடித்த சஞ்சய் ராவத்

புதுடெல்லி, :மகாராஷ்டிராவில் குணமடைந்த கொரோனா நோயாளிகள் ‘அண்ணி அப்பளம்’ (பாபிஜி பப்பட்) சாப்பிட்டு குணமடையவில்லை என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், பாஜக தலைவரை கிண்டலடித்து நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்தார்.மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரவல் மோசமாக இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:

மும்பையின் தாராவி போன்ற குடிசை பகுதிகளில் நோய் தொற்று பரவுவதை மாநில அரசு கட்டுப்படுத்தியுள்ளது. இதனை உலக சுகாதார அமைப்பு பாராட்டி உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், இதிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அது எங்களுக்கு வெற்றியே.

எனது தாயும், எனது சகோதரரும் கூட கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். மகாராஷ்டிராவில் 30,000க்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளனர். மாநிலத்தில் கொரோனா தொற்று நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. மும்பை மாநகராட்சியின் இந்த முயற்சிகளை உலக சுகாதார மையமும் பாராட்டியுள்ளது. இவ்வளவு முயற்சி செய்தும் எதிர்க்கட்சியினர் எங்களை விமர்சிப்பதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளனர். மகாராஷ்டிராவில் குணமடைந்த கொரோனா நோயாளிகள் ‘அண்ணி அப்பளம்’ (பாபிஜி பப்பட்) சாப்பிட்டு குணமடையவில்லை’ என்றார்.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான அர்ஜுன் ராம் மேக்வால் பேசுகையில், ‘அப்பளம் சாப்பிடுவதன் மூலம் கொரோனா வைரஸ் வருவதை தடுக்கலாம்’ என்று தெரிவித்திருந்தார். இதனை கிண்டலடிக்கும் வகையில், சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், ‘அண்ணி அப்பளம்’ சாப்பிட்டு மக்கள் கொரோனாவில் இருந்து மீளவில்லை என்று நாடாளுமன்றத்தில் பேசினார். பாஜக அமைச்சரின் பேச்சை, சஞ்சய் ராவத் கிண்டலடித்து பேசியதால் அவையில் சிறிதுநேரம் சிரப்பலை எழுந்தது.

Tags : minister ,BJP ,Sanjay Rawat , ‘Bride’ Appalam, Corona, BJP Minister, Sanjay Rawat
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...