×

கைத்தாங்கலாக வந்து பதவியேற்ற தேவகவுடா

புதுடெல்லி: கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா (87) போட்டியிட்டு வெற்றி பெற்றார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லிக்கு வந்து பதவியேற்காமல் இருந்த அவர், நேற்று மாநிலங்களவைக்கு வந்து பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அப்போது பேசிய வெங்கையா நாயுடு, ‘‘முன்னாள் பிரதமர், நாட்டின் மிக மூத்த தலைவர்களில் ஒருவருமான தேவகவுடா அவைக்கு வந்துள்ளார். அவரை வரவேற்கிறேன்,’’ என்றார். தேவகவுடா கன்னட மொழியில் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார். நாடாளுமன்றத்துக்கு தேவகவுடா, வயது மூப்பு காரணமாக தனது உதவியாளர்கள் உதவியுடன் கைத்தாங்கலாக நடந்து வந்தார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து 1996ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் முதல் முறையாக மாநிலங்களவையில் ஒருவர் பதவியேற்று உள்ளார்.

Tags : Devaguda , Devagauda to come hand in hand and take office
× RELATED நாட்டின் விடுதலைக்கு பாஜவின் பங்களிப்பு என்ன? தேவகவுடா கேள்வி