×

தமிழகத்தில் சினிமா தியேட்டர் திறப்பது எப்போது?... அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

தூத்துக்குடி: தமிழகத்தில் தியேட்டர்களை திறப்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு, அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள்  ஆய்வு செய்கிறார். இதற்காக தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று பார்வையிட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சையிலும் தூத்துக்குடி மாவட்டம் சிறந்த பணியை மேற்கொண்டு வருகிறது. தமிழக அளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் கொரோனாவால் இறப்பு எண்ணிக்கை குறைவாகும். தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து மருத்துவக்குழு மற்றும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : cinema theater ,Tamil Nadu ,Kadampur Raju , When will the cinema theater open in Tamil Nadu? ... Interview with Minister Kadampur Raju
× RELATED திரையரங்குகள் திறப்பு குறித்து...