×

கூட்டமதைத் தவிர்த்திடு..! கொரோனாவை விரட்டிடு...!! தமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு பாதிப்பு; ஒரே நாளில் 66 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,36,477-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,08,014 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4208431 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 85619 பேர் பலியாகியுள்ளனர். 1013964 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 5,569 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது;

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 4,81,273 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 5,556 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 8,751-ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 987 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,54,624 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 175 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,453 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 63,88,583
 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3,23,290 ஆண்கள், 2,13,157 பெண்கள், 30 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

     ^ கர்நாடகா - 6

     ^ தெலுங்கானா - 1

     ^ கேரளா - 5

     ^ மேற்கு வங்கம் - 2

     ^ ஜார்கண்ட் - 1

     ^ டெல்லி - 1

     ^ பீகார் - 1

Tags : Tamil Nadu , Avoid crowds ..! Get rid of the corona ... !! Corona for another 5,569 in Tamil Nadu; 66 people died in a single day
× RELATED ஆயுதபூஜை தொடர் விடுமுறை 38,000க்கும்...