×

ஒரே நாளில் 2003 பேர் பலி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 25.26 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் எண்ணிக்கை 18.08 லட்சமாக உயர்வு.!!!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 25.26 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 18.08  லட்சத்தை தாண்டியது. நாட்டில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 65,002 பேர் கொரோனா  நோய் தொற்றின் காரணமாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த  எண்ணிக்கையானது 25,26,192 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,68,220 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 18,08,936 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் மேலும் 2003 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 49,036 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 71.61% ஆக உயர்ந்துள்ள  நிலையில், இறப்பு விகிதம் 1.94% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்கள் விகிதம் 26.45% ஆக குறைந்துள்ளது.

மாநிலங்கள் வாரியான விவரம்!!

*மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,72,734 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 364 பேர் உயிரிழந்த நிலையில் மொத்தம் 19,427 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 10, 484 பேர் குணமடைந்த நிலையில் மொத்தம் 4,01,442 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 1,51,865 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,26,245 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 117 பேர் உயிரிழந்த நிலையில் மொத்தம் 5514 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5556 பேர் குணமடைந்த நிலையில் மொத்தம் 2,67,015 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 53,716 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,50,652 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 11 பேர் உயிரிழந்த நிலையில் மொத்தம் 4178 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 790 பேர் குணமடைந்த நிலையில் மொத்தம் 1,35,108 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 11,366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : victims ,Corona ,India , 2003 killed in one day: Corona victims in India exceed 25.26 lakh: number of cured rises to 18.08 lakh !!!
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...