×

கடந்த ஜூலை மாதத்தில் ஏற்றுமதி 10.21 சதவீதம் சரிந்தது: தங்கம் இறக்குமதி 4.17% உயர்வு

புதுடெல்லி: கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 10.21 சதவீதம் சரிந்துள்ளது.  இந்தியாவில் கச்சா எண்ணெய், எலக்ட்ரானிக் உட்பட பலவற்றின் தேவைக்கு இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இதனால் இந்தியா வர்த்தகம் வைத்துள்ள 10 நாடுகளில் 9 நாடுகளுடன் வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது.   இந்நிலையில், கடந்த ஜூலை மாதத்துக்கான ஏற்றுமதி, இறக்குமதி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த மாதம் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 10.21 சதவீதம் சரிந்து 2,364 கோடி டாலராக உள்ளது. பெட்ரோலியம், தோல் பொருட்கள், நகைகள் இறக்குமதி சரிந்ததே இதற்கு காரணம்.

 இதுபோல் இறக்குமதியும் 28.4 சதவீதம் சரிந்து, 2,847 கோடி டாலராக உள்ளது. இதனால் வர்த்தக பற்றாக்குறை 483 கோடி டாலராக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 1,343 கோடி டாலராக இருந்தது.  இறக்குமதியில் கச்சா எண்ணெய் 31.97 சதவீதம் சரிந்து 653 கோடி டாலராக உள்ளது. அதேநேரத்தில் தங்கம் இறக்குமதி 4.17 சதவீதம் அதிகரித்து 180 கோடி டாலராக உள்ளது என மத்திய அரசு புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.



Tags : Gold, imports rose 4.17 percent
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின்...