×

அமெரிக்க அதிபர் தேர்தல்!: கமலா ஹாரிசுடன் சேர்ந்து முதல் முறையாக ஜோபிடன் பிரச்சாரம்..!!

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கமலா ஹாரிசுடன் அதிபர் வேட்பாளர் ஜோபிடன் முதல் முறையாக சேர்ந்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். வடக்கு கரோலினாவில் உள்ள வில்மிங்டன் என்ற இடத்தில் பள்ளி ஒன்றில் ஜனநாயக கட்சி தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கணவன் ஹாரிசுடன் கமலா மேடையில் தோன்றினார். இதேபோல மனைவியுடன் வந்த ஜோபிடனுக்கும் அங்கு திரண்டிருந்தவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

கொரோனா பிடியில் இருந்து அமெரிக்காவை காப்பாற்றி மேம்படுத்த இருவரும் உறுதி பூண்டுள்ளதாக கமலா கூறினார்.  அவரது பேச்சை அரங்கில் திரண்டிருந்தவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இதுகுறித்து கமலா தெரிவித்ததாவது, வெள்ளை மாளிகையில் பணியாற்றும் ஒவ்வொரு நாளும், ஜோவும் நானும் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். நீதிமன்றங்களில் நான் நியாயத்துக்காக வாதாடியதை அனைவரும் கேட்டிருப்பார்கள்.

அதேபோல மக்கள் மன்றத்தில் டிரம்ப் மற்றும் மைக் பென்சுக்கு எதிராக நான் வைக்கும் வாதங்களை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என குறிப்பிட்டார். அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் தேர்விற்கான தேர்தலில் ஜோபிடனை எதிர்த்து கமலா போட்டியிட்டார். இறுதியில் போட்டியில் இருந்து கமலா விலகிவிட்ட நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு ஜோபிடனை இன்று தான் அவர் சந்தித்திருக்கிறார். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ளது.

Tags : Election ,US ,campaigns ,Kamala Harris ,Joe Biden , US Presidential Election ,Joe Biden, Kamala Harris ,
× RELATED தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு...