×

சாலைகளில் சுற்றித்திரிந்த பன்றிகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைப்பு

விழுப்புரம்: விழுப்புரம் நகர பகுதிகளில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சாலைகளில் வலம் வருவதால் அடிக்கடி இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இதனையடுத்து நகர பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென  புகார் அளித்தனர். இதனையடுத்து பன்றிகளை வளர்ப்போர்  நகர பகுதிகளில் பன்றிகளை விடக்கூடாது வீடுகளிலேயே பட்டி கட்டி வளர்க்க வேண்டும்.

இல்லை எனில் பன்றிகள் பிடித்து செல்லப்படும் என அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அரசு குடியுருப்புகள் மற்றும் சாலைகளில் வலம் வந்த 50க்கும் மேற்பட்ட பன்றிகளை நகராட்சி ஊழியர்கள் வாகனங்களில் பிடித்து சென்று விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.


Tags : care center ,roads , Pigs, Care Center
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...