×

4 வது நாளாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு!: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1104 குறைந்து ரூ.40,832-க்கு விற்பனை!!!

சென்னை:  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,104 குறைந்து உள்ளது. இதனால் சாமானிய மக்களும் நகை வாங்க அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,104-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,832-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.7.50 காசுகள் குறைந்து ரூ.7.30-க்கு விற்பனையாகிறது.

தொடர்ந்து 4வது நாளாக தங்கத்தின் விலை சரிந்து கொண்டே வருகிறது. அதாவது முதல் நாள் 184 ரூபாயும், 2வது  நாள் 352 ரூபாயும், 3வது நாள் 2048 ரூபாயும் குறைந்து தங்கமானது விற்பனையானது. இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதார நிலையில் பெரிதும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து புதிய உச்சம் தொட்டுக் கொண்டே வந்தது.

இதன் காரணமாக தங்க ஆபரணத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. போகிற போக்கில் சாமானியர்கள் தங்கத்தினை நினைத்து பார்க்க முடியுமா? இல்லையா என்று கருத்துக்கள் கூட நிலவி வந்தன. இந்த நிலையில் இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் தற்போது 4வது நாளாக தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 104 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் கொரோனா இடர்பாடுகளிலும் தங்கம் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறன்றனர்.

Tags : Chennai , Gold prices ,chennai,gold rate,
× RELATED தங்கம் விலை சவரனுக்கு 120 குறைந்தது