×

சென்னை சாலிகிராமத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி உயிரிழப்பு!

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழகத்தில் ஒரு பக்கம் அலோபதி முறையில் மருத்துவம் அளித்து வரும்நிலையில், மறுபுறம் பாரம்பரிய முறையான, மூலிகை மருத்துவத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. கோடம்பாக்கம் மண்டலம், சாலிகிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், கொரோனா நோயாளிகளுக்காக, சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை சென்னை மாநகராட்சி அமைத்தது. இங்கு, காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் வரும் பலர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி வருகின்றனர்.

சித்த மருத்துவத்துறை அங்கீகரித்துள்ள, கபசுரக் குடிநீரோடு, ஆடாதொடை கசாயம், கற்பூரவள்ளி ரசம், சிறப்பு மூலிகை தேனீர் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு நோயாளியின் உடலுக்கு ஏற்ப இங்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால், கொரோனா நோயாளிகள் பலர் விரைவில் குணமாகி வீடு திரும்பி வந்த நிலையில்,  இங்கு கொரோனா நோயாளி உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 87 வயது கொரோனா நோயாளி ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியேலேயே அம்முதியவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழப்பது இதுவே முதல் முறை ஆகும், என்பது குறிப்பிடத்தக்கது.
 

Tags : patient ,Corona ,Chennai ,Siddha Hospital ,Saligramam , Chennai, Saligramam, Siddha Hospital, Corona, patient, death
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...