×

கேரளாவில் கோயில்களில் 17ம் தேதி முதல் தரிசிக்கலாம்

திருவனந்தபுரம்: ஊரடங்கு காரணமாக கேரளாவில் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இரு வாரங்களுக்கு முன் சபரிமலை கோயில் தவிர, மற்ற கோயில்களில் வெளியே நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், மலையாள மாதம் 1ம் தேதியான ஆகஸ்ட் 17ம் தேதி முதல், சபரிமலையை தவிர மற்ற கோயில்களுக்குள் சென்று தரிசிக்க, பக்தர்களை நிபந்தனைகளுடன் அனுமதிக்கலாம் என நேற்று நடந்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, காலை 6 மணிக்கு முன்பும், மாலை 6.30க்கும் 7 மணிக்கும் இடையிலும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. 10 வயதுக்கு குறைவான குழந்தைகள், 65 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு அனுமதி கிடையாது.


Tags : Kerala , Kerala Temple can be visited from the 17th
× RELATED புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை காஞ்சி...