×

பெட்ரோல்-டீசல் விலை வித்தியாசம் குறைவால் டீசல் கார்கள் விற்பனை வரலாறு காணாத சரிவு

புதுடெல்லி: டீசல் கார்கள் விற்பனை கடந்த ஏப்ரல் ஜூலை காலாண்டில் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. பெட்ரோலை விட டீசல் விலை மிக குறைவாக இருந்ததால் பலர் டீசல் கார்களை வாங்கினர். பெட்ரோல் காரை விட விலை அதிகம் என்றாலும் லாபம் கிடைக்கும். ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வந்தன. குறிப்பாக, டெல்லி உட்பட சில நகரங்களில் பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகரித்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், டீசல் கார்கள் விற்பனை சரிந்தது. கடந்த ஏப்ரல் ஜூலை காலாண்டில், சிறிய மற்றும் செடான் கார்களின் மொத்த விற்பனையில் டீசல் கார்களின் பங்களிப்பு விற்பனை வெறும் 1.8 சதவீதம் தான்.

எஸ்யூவி ரக கார்களிலும் டீசல் கார்களுக்கு மவுசு இல்லை. இதன் சந்தை பங்களிப்பு தற்போது 42 தவீதமாக குறைந்துவிட்டது. கடந்த 2011-12 நிதியாண்டில் டீசல் கார்களே சந்தையை ஆக்கிரமித்தன. மொத்த எஸ்யுவி கார்களில் 98 சதவீதம் டீசல் கார்கள்தான். 2012-13 நிதியாண்டில் டீசல் கார்கள் பங்களிப்பு 47 சதவீதமாக இருந்தது. சில சமயம் 50 சதவீதத்தை தொட்டது. கடந்த 2012 மே மாதத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் இடையேயான விலை வித்தியாசம் 33 ரூபாய்தான். இந்த வித்தியாசம் தற்போது 5 ரூபாய்க்கும் கீழ் வந்து விட்டது. இதுபோல், பிஎஸ்6 தர நிலை அமலுக்கு வந்ததால் டீசல் பெட்ரோல் கார்களிடையே விலை வித்தியாசம் ரூ.1 லட்சத்துக்கு மேல் உள்ளது. தற்போது இந்தியாவில் பெட்ரோல் கார் மாடல்கள் 97 உள்ளன. டீசல் கார்கள் 15 மட்டுமே. இதே நிலை தொடர்ந்தால் டீசல் கார்கள் சந்தையில் இருந்து காணாமல் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.

* 2011-12ல் பெட்ரோலை விட டீசல் விலை ரூ.30 ரூபாய்க்கும் மேல் குறைவாக இருந்தது. தற்போது இந்த விலை வித்தியாசம் 5 ரூபாய்க்கும் கீழ் வந்து விட்டது.
* 2011-12ல் எஸ்யுவி கார்களில் 98 சதவீதம் டீசல் கார்களே ஆக்கிரமித்தன. இது தற்போது தலைகீழாகி விட்டது.
* பெட்ரோல் கார்களை விட டீசல் கார் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் அதிகம். பிஎஸ்6 அறிமுகத்துக்கு பிறகு விலை மேலும் உயர்ந்து விட்டது.

Tags : Sales of diesel cars plummeted due to lower petrol-diesel price difference
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...