×

கடந்த மார்ச் முதல் இதுவரை அரசு மருத்துவமனைகளில் 1.8 லட்சம் பிரசவங்கள் நடைபெற்றுள்ளது: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

கடந்த 4 மாதங்களில் 1.8 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகள் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே புறநோயாளிகள் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் இல்லாமலும், மருத்துவமனையில் இடம் இல்லாமல் அவதிக்குள்ளானது. குறிப்பாக புறநோயாளி பிரிவுக்கு வருபவர்கள் கர்ப்பிணிகளே. இருப்பினும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிகளுக்கு முறையாக பிரசவம் பார்க்கப்பட்டது.

அதேபோல் கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கும் பாதிப்பு ஏதும் இல்லாமல் ஆரோக்கியமாக குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை  அரசு மருத்துவமனைகளில் 1,80,571 பிரசவங்கள் நடைபெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், கடந்த 4 மாதங்களில் 67,679 சிசேரியன் பிரசவங்கள் உட்பட 1,80.571 பிரசவங்கள் நடைபெற்றுள்ளது. 126 பேறுகால மற்றும் பச்சிளம் குழந்தை சிகிச்சை மையங்களில் 1,29,206 பிரசவங்கள் நடந்துள்ளது. தமிழகம் முழுவதிலும் 33.374 குழந்தைகள் சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசு மருத்துவமனைகளின் திறம்பட சேவை வழங்கியதால் புறநோயாளிகள் மற்றும் பிரசவங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது. மார்ச் 2020 முதல் இதுவரை தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 5 கோடியே 9 லட்சத்து 2,183 நபர்கள் புறநோயாளிகளாகவும் 27,30,864 நபர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். கரோனா தொற்றினால் இதற்கு முன்னர் தனியார் மருத்துவமனைகளை நோயாளிகள் அணுக இயலாத நிலையில் தனியார் மருத்துவமனைகளின் பளுவையும் அரசு மருத்துவமனைகள் திறம்பட எதிர்கொண்டு அர்பணிப்பு உணர்வுடன் அரசு மருத்துவமனைகளில் சேவைகள் வழங்கப்பட்டதால் புற நேயாளிகள் மற்றும் பிரசவங்களின் எண்ணிக்கை அரசு மருத்துவமனைகளில் உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு, தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் மக்கள் நலன் காக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும், என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


Tags : deliveries ,Health Minister ,government hospitals , Government Hospitals, Maternity,Health Minister Vijayabaskar
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...