×

தங்கத்தின் விலை குறைந்த போதிலும் வெள்ளியின் விலை குறையவில்லை: தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் தங்கத்தின் விலை ரூ.408 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்து சவரன் ரூ. 42,512-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 5314-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்த போதிலும் வெள்ளியின் விலை குறையவில்லை. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.1.50 காசு உயர்ந்து ரூ.84.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையில் இன்று 2 நாட்களாக சற்று குறைந்து வருகிறது.  உலகம் முழுவதும் கொரோனாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொருளாதாரமே நிலை குலைந்து இருக்கும் சூழ்நிலையிலும் தங்கம் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு சிறுக, சிறுக பணம் சேர்த்து நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.37,616க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை குறையாமல் தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. கடந்த 1ம் தேதி தங்கம் ஒரு சவரன் 41,568க்கும், 3ம் தேதி 41,592, 4ம்  தேதி 41,616,  5ம் தேதி 42,592க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 18வது நாளாக கடந்த 7-ம் தேதி ரூ.46 அதிகரித்து  ஒரு கிராம் ரூ.5420க்கும், சவரனுக்கு ரூ.368 அதிகரித்து ஒரு சவரன் ரூ.43,360க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை  வரலாற்றில் அதிகப்பட்சம்.

இந்நிலையில், கடந்த 8-ம் தேதி  தங்கத்தின் விலை சற்று குறைந்து. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.288 குறைந்து ஒரு சவரன் ரூ.43,040க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலை மாற்றமில்லாமல் நேற்று முன்தினம் விலையில் விற்பனையானது. இந்நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. தங்கத்தின் விலை 2 வது நாளாக குறைந்து வருவது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியே ஏற்படுத்தியுள்ளது. நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.  இதனைபோல், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி கிராமிற்கு  ரூ.20 காசுகள் குறைந்து ரூ.82.63-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



Tags : Gold prices, Rs 408,r second day,row
× RELATED கொடைகானல் மேல்மலை கிராமங்களில் பயங்ககரமான காட்டுத் தீ