×

கூடுதல் விலைக்கு இறைச்சி விற்பனை

திருத்தணி: கொரோனா பரவலை தடுக்க இம்மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் கோழி, ஆடு மற்றும் மீன் ஆகியவை வழக்கமாக விற்கப்படும் விலையைவிட, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, திருத்தணி பகுதிகளில் ஆட்டு இறைச்சி ஒரு கிலோவுக்கு நூறு ரூபாய் கூடுதலாகவும், கோழிக்கறி, ஒரு கிலோவுக்கு 40 ரூபாய் கூடுதலாகவும், மீன் விலை ஒரு கிலோவுக்கு, 30 ரூபாய் கூடுதலாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், அசைவ பிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Tags : Extra price, meat, sale
× RELATED பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதற்கு...