×

ஆடி கிருத்திகை கொண்டாட்டம்: வருவாய்த்துறை எச்சரிக்கை

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், பாலாபுரம், வங்கனூர், ஸ்ரீகாளிகாபுரம், ராஜாநகரம், வெடியங்காடு, எரும்பி உள்ளிட்ட பலவேறு இடங்களில் இன்று ஆடி பொங்கல் வைக்க உள்ளதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொங்கல் வைக்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வருவாய் துறையினர், “ஊர்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடி பொங்கல் வைக்க கூடாது. இதேபோல், ஆடி கிருத்திகை விழா கூட்டம் கூடி நடத்தக்கூடாது. வார சந்தை நடத்தக்கூடாது” என தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுத்தனர். மேலும், அதை மீறி நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

Tags : Audi Celebration, Celebration, Revenue, Warning
× RELATED கடல் சீற்றங்களால் அழிந்ததா கீழடி...