×

தொழிலாளர்கள், கட்டுமான பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் டெண்டர் பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடித்து தர வேண்டும் என திடீர் நெருக்கடி: பொறியாளர்கள் உத்தரவால் அதிர்ச்சி; பொதுப்பணித்துறையில் பரபரப்பு

சென்னை: தொழிலாளர்கள் இல்லை, கட்டுமான பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒப்பந்த உடன்படிக்கையின் படி டெண்டர் எடுத்த பணிகளை அந்த காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று பொறியாளர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். தமிழக பொதுப்பணித்துறையில் நீர்வளப்பிரிவு மூலம் அணை, ஏரிகள் புனரமைத்தல், தடுப்பணைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக கடந்தாண்டு ரூ.4 ஆயிரம் கோடியில் டெண்டர் விடப்பட்டு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்தல், முக்கொம்பு கதவணை அமைத்தல், ஓரத்தூர் அருகே புதிய நீர் தேக்கம் அமைத்தல், ஏரி, அணைகள் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஊரடங்கு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை அமலில் உள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் மே 18ம் தேதி முதல் கட்டுமான பணிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதாலும், கட்டுமான பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் டெண்டரில் குறிப்பிட்டுள்ள காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க முடியாத சூழல் உள்ளது. அதே நேரத்தில் பணிகளை விரைந்து முடிக்க கான்டிராக்டர்களுக்கு பொறியாளர்கள் நெருக்கடி தருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 5 மாத ஊரடங்கு காலத்தை ஒப்பந்த உடன்படிக்கையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை கட்டுமான ஒப்பந்ததாரர்கள் பொது நல சங்கத்தினர் கூறுகையில், ஊரடங்கு காரணமாக 5 மாதத்திற்கு அரசிடம் இருந்து விலக்கு பெற்று ஊரடங்கிற்கு பின்னர் முடிக்கப்படும் பணிகளுக்கு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய காலத்தில் முடிக்கப்பட்டதாக கூறி ஊக்க தொகை வழங்க வேண்டும். மேலும், இந்த 5 மாத காலத்தை உடன்படிக்கையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என்றனர்.

Tags : crisis ,engineers , Workers, construction materials, problem, tender work, engineers ordered, shock; PWD
× RELATED பாகிஸ்தான் சலவைக்கல் சுரங்கம்...