×

கொரோனாவுடன் ஊர் சுற்றிய எஸ்.ஐ சஸ்பெண்ட்

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் எஸ்.ஐ.யாக இருப்பவர் சிவராஜா (28). இவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி, காவல்துறை அவருக்கு விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் தாண்டிக்குடியில் ஏற்பட்ட ஒரு தகராறில் தலையிட்டு ஒருவரை தாக்கியதில், அவர் பலத்த காயமடைந்துள்ளார். இது குறித்து அவரால் தாக்கப்பட்ட நபர்,  தாண்டிக்குடி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரணை செய்த போது, சிவராஜா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்பதும், தனிமைப்படுத்திக் கொள்ளாமல் ஊர் சுற்றி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து திண்டுக்கல் எஸ்.பி ரவளிப்பிரியா, எஸ்.ஐ சிவராஜாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Tags : town ,Corona ,SI , Corona, around town, SI, Suspended
× RELATED கொரோனாவுக்கு மதுரையில் 2 எஸ்ஐ பலி