×

ஐகோர்ட் உத்தரவுப்படி மாணவர்களுக்கு விரைவில் முட்டை: அமைச்சர் தகவல்

நாமக்கல்:சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, நாமக்கல்லில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு முட்டை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றி விரைவில் முட்டை வழங்கப்படும். ஏற்கனவே, சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு போன்றவை வழங்கப்பட்டுள்ளது. முட்டையை எப்படி வழங்குவது, வாரம் எத்தனை முட்டை வழங்குவது என்பது குறித்து முதல்வரின் அறிவுரையை பெற்று திட்டத்தை செயல்படுத்துவோம் என்றார்.

Tags : Eggs soon for ,students, per iCourt orde, Minister informed
× RELATED புதூர் வட்டார பகுதியிலுள்ள...