×

கேரளாவை தொடர்ந்து மிரட்டும் கனமழை: வயநாட்டில் பல இடங்களில் நிலச்சரிவு...மீட்பு பணிகள் தீவிரம்..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் தொடர்ந்து 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 3 தினங்களாகவே மழை பெய்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து 2 தினங்களாக வயநாடு பகுதிகளிலும் கேரள மாநிலம் இடுக்கி பகுதிகளிலும்  கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக வயநாடு முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குடியிருப்பு பகுதிகள், ஆறுகள் உள்ளிட்டவைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் நேற்று முழுவதுமாக பெய்த கனமழையால் கேரள மாநிலம் மூணாறு மாவட்டத்தில் ராஜமலை என்ற பகுதியில் பெரியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் புதைந்துள்ளன. இதில் சிக்கி 80 பேர் மாயமாகியுள்ளனர். தொடர்ந்து 3 நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 4 நபர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 80 பேரின் நிலை என்ன என்று இதுவரை தெரியவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட சமயத்தில் அங்கிருந்து தப்பி வந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் தற்போது ராஜமலை பகுதியில் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதிக்கு செல்லக்கூடிய பாலம் அடித்து செல்லப்பட்டிருப்பதால் மீட்புப்பணியினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இடுக்கி மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் சேற்றில் சிக்கியுள்ள 80 பேரை மீட்கும் பணியில் அதிகாரிகளும், வனத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள சேற்றுக்குள் 20 வீடுகள் புதையுண்டு உள்ளதாக மீட்புடையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : parts ,Kerala ,Wayanad ,places , Heavy rains continue to threaten Kerala: Landslides in many places in Wayanad ... Rescue work intensified .. !!
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...