×

ஓ.டி.பி நம்பர் கேட்டு பாதுகாப்புத்துறை ஊழியர் வங்கி கணக்கில் ரூ.4.80 லட்சம் மோசடி

ஆவடி: ஆவடி அடுத்த வீராபுரம், ஏ.கே.ஏ நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ் (64). இவர் ஓய்வு பெற்ற பாதுகாப்பு துறை ஊழியர். கடந்த 4ம்தேதி இவருடைய செல்போனுக்கு மர்ம நபர் போன் செய்துள்ளார். பின்னர், அவர் வங்கியில் இருந்து பேசுவதாக புஷ்பராஜிடம் கூறி உள்ளார். அதன் பிறகு, அவர் புஷ்பராஜிடம் உங்கள் செல்போனுக்கு ஆறு இலக்கத்தில் ஓ.டி.பி எண் வந்துள்ளது. அதனை, நீங்கள் பார்த்து கூறுங்கள் என கேட்டுள்ளார். இதனை நம்பிய அவரும் செல்போனில் 8முறை வந்த ஓ.டி.பி எண்ணை கூறியுள்ளார். அதன் பிறகு, அந்த மர்ம நபரும் போனை துண்டித்து விட்டார்.

பின்னர், சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரூ.4.80 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக செல்போனில் குறுச்செய்தி  வந்தது. இதனை பார்த்து புஷ்பராஜ் அதிர்ச்சி அடைந்தார். மேலும், அவரிடம் மர்ம நபர் பண மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து புஷ்பராஜ் ஆவடி டேங்க் பேக்டரி காவல்நிலையத்தில் நேற்று புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்துள்ளனர். மேலும், போலீசார் தனிப்படை அமைத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags : OTP , Asking for OTP number, security guard, bank account, Rs 4.80 lakh, fraud
× RELATED ஊராட்சி நிதியில் மோசடி கிராமமக்கள் புகார்