×

46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மும்பையில் கொட்டியது மழை: 3வது நாளாக முடங்கியது மாநகரம்

மும்பை: கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மும்பையில் இந்த மாதத்தில் அதிகபட்ச மழை பெய்து நகரை வெள்ளக்காடாக்கி இருக்கிறது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. நேற்று மழை சற்று குறைந்தது. நேற்று முன்தினம் மணிக்கு 107 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் மும்பையில் கனமழை பெய்தது. ரயில் பாதைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளிலும் வெள்ளம் தேங்கியதால் ரயில், சாலை போக்குவரத்து அடியோடு முடங்கின். இதனால் நகரின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

நிலமையை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்பு படை பல்வேறு இடங்களில் களம் இறக்கப்பட்டு மீட்பு பணி முடுக்கி விடப்பட்டது. பல இடங்களில் கட்டிடங்கள், வீடுகள் இடிந்தன. மரங்கள் வேறுடன் சாய்ந்தன. இவற்றில் வாகனங்கள் சிக்கி நொறுங்கின. நேற்று முன்தினம் கொலொபா பகுதியில் காலை 8.30 மணி தொடங்கி, அடுத்த 24 மணிநேரத்தில் 331.8 மிமீ மழை பெய்துள்ளது. இது கடந்த 1974ம் ஆண்டு ஆகஸ்டில் பெய்த மழையை விட அதிகமாகும். கடந்த 2005ம் ஆண்டில் 12 மணி நேரத்தில் 900 மிமீ மழை பெய்திருந்தது. நேற்று முன்தினம் அதைவிட கூடுதல் மழை பதிவானது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் 5 நாட்களில் மும்பையில் இந்த மாதத்தில் பெய்ய வேண்டிய மழையில் 64 சதவீத பொழிந்து விட்டது.


Tags : rainfall ,Mumbai ,City , 46 years, to the extent, Mumbai, pouring rain, paralyzed for 3rd day, metropolis
× RELATED ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: கோவா-மும்பை இன்று அரையிறுதியில் மோதல்