×

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியத்துவம்: தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு...பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்.!!!

சென்னை: தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் அனைத்தும் ஆன்லைன் வகுப்பிற்கு மாறியுள்ளனர். மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சியில் பாடம் நடத்துவதற்கான திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டிருக்கிறது. மாணவர் சேர்க்கை எப்போது நடைபெறும் என்று வரும் திங்கட்கிழமை முதலமைச்சர் அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இந்நிலையில், பள்ளிகள் நவம்பர் மாதத்தில் திறக்கப்படலாம் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இருந்து உறுதிபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாவட்டங்களில் இந்த பரவலானது குறையாமல் தொடர்ச்சியாக தொடரக்கூடிய சூழ்நிலையில், அடுத்து வரக்கூடிய மாதங்கள் தவிர்த்து நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கலாம் என முதல்கட்டமாக முடிவு செய்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளை எப்போது திறக்கலாம், எந்த பாடங்களை நீக்குவது, பாடத்திட்டத்தை எப்படி குறைப்பது என்பது தொடர்பாக ஏற்கனவே நிபுணர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

 அதன்படி 30 சதவீதம் வரை பள்ளி பாடத்திட்டங்களை குறைக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தரப்பிலான இக்குழு அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறார்கள். 2020 - 2021ம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் முக்கியத்துவம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டால் அதன் பின்பாக நடத்தப்படக்கூடிய பாடங்களை கணக்கில் கொண்டு அந்த பாடங்களில் இருந்து கேள்வி தாள்களை தயாரித்து தேர்வெழுத வைக்கலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது.

Tags : schools ,Tamil Nadu ,School education officials , Importance for 10th and 12th class students: Opportunity to open schools in Tamil Nadu in November ... School education officials informed. !!!
× RELATED தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளியில் ஆர்.டி.ஈ. சேர்க்கை இன்று தொடக்கம்..!!