×

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அயோத்தி கோயிலின் பூமி பூஜை நடைபெற்றது : ஜி.கே.வாசன் எம்.பி. பாராட்டு!!!

சென்னை : அயோத்தி கோயிலின் பூமி பூஜை மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்றது என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஆக.6) வெளியிட்ட அறிக்கை:

நீண்ட காலமாக நீடித்து வந்த ராமஜென்ம பூமி பிரச்சினைக்கு உச்ச நீதிமன்றம் ஒரு நல்லத் தீர்ப்பை வழங்கியது. பிரச்சினையில் தொடர்புடைய இரு தரப்பினரும் மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள்.

உலக அளவில் இந்துக்களுக்கு பெருமை சேர்க்கக்கூடிய ராமபிரானின் திருக்கோயில் அயோத்தியில் அடிக்கல் நாட்டு விழா. அன்றைய நிகழ்வில் வழக்குத் தொடுத்தவரில் ஒருவரான முஸ்லிம் அமைப்பைச் சார்ந்த முக்கிய பிரதிநிதி கலந்துகொள்வது, மத நல்லிணக்கத்திற்கும் சிறந்த அணுகுமுறைக்கும் நல்ல எடுத்துக்காட்டாகும்.

இத்தகைய இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மற்றும் அனைத்து மதமும் பங்கேற்று நடைபெறுவதும் மற்றும் நேரடியாக தொலைக்காட்சியில் பார்க்கக்கூடிய இந்த நிகழ்வு, இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஒரு எடுத்துக்காட்டு. மேலும், வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியில் தேசத்தின் பிரதிநிதியாக பிரதமர் மோடி கலந்துகொண்டது தனிச்சிறப்பு. அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் கம்பராமாயணம் பற்றி பேசியது மகிழ்ச்சிக்குரியது.

இந்த மாபெரும் நிகழ்வுக்கு பாடுப்பட்ட தங்களை அற்பணித்துக்கொண்ட குரல் கொடுத்தத் தலைவர்கள், பக்தர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் இந்த தருணத்திலே போற்றுதலுக்குரிய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஒற்றுமை உலக நாடுகளுக்கே நல்ல செய்தி என்று குறிப்பிட விரும்புகிறேன்

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Tags : GK Vasan ,Bhoomi Puja ,Ayodhya Temple , Religious Reconciliation, Ayodhya, Temple, Bhoomi Pooja, GK Vasan, MP , Praise
× RELATED நீட் தேர்வை தைரியத்துடன் எழுதுங்கள்: மாணவர்களுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து