×

வேகமாக பரவுகிறது பாக்டீரியா காய்ச்சல் சிவப்பு வெங்காயமா...? அமெரிக்காவில் அலறல்: கடைகளில் விற்பனை செய்ய அதிரடி தடை

நியூயார்க்: சிவப்பு வெங்காயம் என்றாலே அமெரிக்காவில் பலரும் அலறி அடித்துக் கொண்டு ஓடுகின்றனர். அப்படி என்ன அபாயமானதா அந்த வெங்காயம்? ஆம், எல்லாம் ரசாயன உரம் தரும் ஆபத்துதான். பொதுவாக வெங்காயம் என்றாலே உடல் எதிர்ப்பு சக்தியை கூட்டும் காய்கறி வகை என்றுதான் நமக்கு தெரியும். நாமும் பச்சையாக வெங்காயத்தை உண்ணும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறோம். ஆனால், அமெரிக்காவில் எல்லாமே செயற்கை உரமூட்டி, பெருக்க வைக்கப்பட்ட வகை வெங்காயம். அதனால், நம்மூர் இயற்கை வெங்காயத்தை விட, அளவிலும், தன்மையிலும் வேறுபடும். ஒவ்வொரு வெங்காயத்தின் அளவும் 2 கிலோ வரை கூட இருக்கும்.

பல வண்ணங்களில் கூட கிடைக்கும். குறிப்பாக சிவப்பு, மஞ்சள் மற்றும் இனிப்பு வெங்காயத்தை அமெரிக்காவில் மக்கள் விரும்பி சமைப்பார்கள். அசைவ உணவு வகைகளில் இந்த வகை வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சில சமயம், சிக்கன் போன்ற உணவுப்பொருட்கள் மூலம் பரவும் ஒரு வகை ‘சால்மோனல்லா பாக்டீரியா’, இந்த வகை சிவப்பு வெங்காயத்திலும் உண்டு. சமீபத்தில் சிவப்பு வெங்காயத்தின் மூலம் சால்மோனல்லா பாக்டீரியா காய்ச்சல் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. 50 மாநிலங்களில் 38ல் இந்த பாக்டீரியா காய்ச்சல் பரவியது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மக்கள் சிவப்பு வெங்காயத்தை வாங்குவதை நிறுத்திக் கொண்டனர். மற்ற வெங்காயத்துக்கும் கிராக்கி குறைந்து விட்டது. சால்மோனல்லா பாக்டீரியா காய்ச்சல் பரவுவதை அடுத்து, இந்த இனிப்பு வகை வெங்காய வகைகளுக்கு தடை விதித்து மாநில நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வெங்காயத்தை உடனே கடைகளில் இருந்து வாபஸ் பெறும்படியும் விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டது. அமெரிக்க மக்களை ஏற்கனவே கொரோனா வைரஸ் பயமுறுத்தி வரும் நிலையில், ‘சால்மோனல்லா பாக்டீரியா’ இன்னும் பீதியை கிளப்பி வருகிறது.

* வெங்காயத்தில் மட்டுமல்ல...
பெரும்பாலும் உணவு வகைகள், தண்ணீர் மூலம் தான் சால்மோனல்லா பாக்டீரியா பரவும் ஆபத்து உள்ளது. வெங்காயம் மட்டுமில்லாமல், மாட்டிறைச்சி, சிக்கன், முட்டை, பன்றி இறைச்சி, பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், வெண்ணை போன்ற உணவுகள் மூலம் பாக்டீரியா  பரவும் ஆபத்து உண்டு. இதை முன்னெச்சரிக்கையாக கண்காணித்து தான் உற்பத்தி செய்து சப்ளை செய்யப்படுகிறது. அமெரிக்காவில் முக்கியமாக 11 கம்பெனிகள் வெங்காய வர்த்தகம் செய்கின்றன. கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து தான் பல மாநிலங்களுக்கு வெங்காயம் அனுப்பப்படுகிறது. இப்போது இந்த நிறுவனங்களுக்கு வெங்காய தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடலை வறுத்தெடுக்கும் வாந்தி, பேதி பிச்சுக்கும்..
* சால்மோனல்லா பாக்டீரியா மூலம் பரவும் காய்ச்சல் உடலை வறுத்தெடுத்து விடும். வாந்தி, பேதி, வயிற்று வலி வரும்.
* பல காலமாக அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வரக்கூடியது.
* குழந்தைகள், வயதானவர்களுக்கு தான் பெரும்பாலும் இந்த நோய் வரும்.
* இதற்கு மருந்து என்று தனியாக கிடையாது.
* பெரிய அளவில் பாதிக்காது என்றாலும், முன்னெச்சரிக்கை தேவை. இல்லாவிட்டால், உயிர்பறிப்பு வரை போய் விடும்.
* உடலில் உள்ள நீர்ச்சத்தை வற்ற வைத்து விடும். அதனால், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

Tags : United States , Spreading fast, bacterial fever, red onion ...?, America scream
× RELATED அரசு பேருந்தில் பயணம் செய்த...