×

நகராட்சி ஊழியர்கள் ஓட்டம் நோயாளி சடலத்தை அடக்கம் செய்த டாக்டர்

தெலங்கானாவில் கொரோனா பாதிப்பில் இறந்தவர்களின் சடலங்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதில் அலட்சியம் காணப்படுகிறது. நிஜமாபாத் அரசு மருத்துவமனையில் இறந்த நோயாளியின் சடலம் நேற்று முன்தினம் ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல், மற்ற அரசு மருத்துவமனைகளிலும் இந்த அவலம் காணப்படுகிறது.  பெத்தப்பல்லி அரசு மருத்துவமனையில் இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால், நகராட்சியில் இருந்து டிராக்டர் கொண்டு வரப்பட்டது. ஆனால், கொரோனாவில் இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்ல மாட்டோம் என நகராட்சி ஊழியர்கள் கூறி விட்டதால், ஸ்ரீராம் என்ற டாக்டரே டிராக்டரை மயானத்துக்கு ஓட்டிச் சென்று சடலத்தை அடக்கம் செய்தார்.

Tags : Dr. ,patient , Municipal staff, flow, patient corpse, burial, dr
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் டாக்டர் பலி