×

9 லட்சம்

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து 4வது நாளாக நேற்று 26 ஆயிரத்தை கடந்துள்ளது. இதே நிலை நீடித்தால், பாதிப்பு எண்ணிக்கை இன்று 9 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில், ‘நேற்று ஒரே நாளில் 28,701 பேர் பாதித்துள்ளதை தொடர்ந்து, மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,78,254 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 4வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 500 உயிரிழந்துள்ளதால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 23,174 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 5,53,470 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 3,01,609 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் குணமடைந்தோர் சதவீதமும் 63.01 ஆக உயர்ந்துள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : 9 lakhs
× RELATED சூதாட்ட கும்பலை பிடித்த போலீசாருக்கு...