×

கொரோனா பரிசோதனை முகாம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அண்ணாநகர் பகுதியில் டாக்டர் பிரபாகரன், டாக்டர் யாழினி தலைமையில் கொரோனா பரிசோதனை முகாமும், செட்டி தெருவில் மருத்துவ முகாமும் நடைபெற்றன. இதில், சுகாதார ஆய்வாளர்கள் சுப்பிரமணி, நித்யானந்தன், மருந்தாளுநர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இம்முகாமில் காய்ச்சல், இருமல், சளி உள்ளவர்கள் என 49 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், மருத்துவ முகாமில் 91 பேருக்கு காய்ச்சல் உள்ளதா என சோதனை நடத்தி மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

Tags : Corona Experiment Camp , Corona, experiment, camp
× RELATED கொரோனா பரிசோதனை முகாம்