×

மோடி ஆட்சியில் சீனா அபகரித்த நிலம் என்ன ஆச்சு? ராகுல் கேள்வி

புதுடெல்லி: ‘மோடி ஆட்சியில் சீனா அபகரித்த நிலம் என்ன ஆச்சு?,’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். லடாக் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் இருந்து சீனா பின்வாங்கியிருக்கும் விவகாரத்தில் மீடியாக்களை அரசு தவறாக வழிநடத்துவதாகவும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நம் படைகள் விலகியிருப்பது இந்தியாவுக்கு பின்னடைவே என்றும் பாதுகாப்பு துறை நிபுணரின் கருத்து ஊடகத்தில் வெளி வந்திருப்பதை ராகுல் காந்தி தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன், ‘‘மோடி ஆட்சியில், சீனா பாரத தாயின் புனித நிலத்தை அபகரித்து சென்றது என்ன ஆச்சு?’’ என கேள்வி எழுப்பி உள்ளார். அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எழுதிய கடிதத்தில், ‘‘பல்லியாவின் நேர்மையான இளம் பெண் நிர்வாக அதிகாரி மணி மஞ்சரி ராய் தற்கொலை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தி, அதிகாரி குடும்பத்திற்கு நீதி பெற்று தர வேண்டும்’’ என வலியுறுத்தி உள்ளார்.

Tags : land ,China ,Modi , Modi regime, land confiscated by China, what's the matter ?, Rahul question
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!