×

கழுத்தில் துண்டு இறுக்கியதில் சிறுமி சாவு கட்டிலில் இருந்து தவறி விழுந்த மாணவியும் பலி

கோவை:  கோவை நீலிகோணம்பாளையம் தாமோதரசாமி லே அவுட் பகுதியை சேர்ந்தவர் அருள் ஞான் ஜோன்ஸ். துபாயில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இவர் கொரோனா நோய் பரவல் காரணமாக கோைவ வந்து விட்டார். இவரது மகள் ஜெர்லின் நேகா (9). 4ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இவர் வீட்டில் தனது 4 வயது தம்பியுடன் விளையாடி கொண்டிருந்தார். வீட்டில் இருந்த ஊஞ்சல் கொக்கியில் நீளமான துண்டை தொங்கவிட்டு அதை கழுத்தில் மாட்டி ஜெர்லின் நேகா விளையாடியதாக தெரிகிறது. துண்டு இறுகியபோது மூச்சு திணறி மயங்கினார்.

சிறுவன், தனது அக்காள் துண்டில் தொங்கி ெகாண்டிருப்பதை பார்த்து வேறு அறையில் இருந்த பெற்றோரிடம் சென்று கூறியுள்ளான்.
இதைகேட்ட பெற்றோர் அங்கே சென்று பார்த்தபோது ஜெர்லின் நேகா உயிருக்கு போராடியது தெரியவந்தது. அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஒண்டிப்புதூர் சாமியார் மேடை பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (40). வேன் டிரைவர். இவரது மகள் பவதாரணி (9). தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் இவர் தனது வீட்டில் கட்டிலின் மேல் உட்கார்ந்து பள்ளியில் இருந்து ஆன்லைனில் அனுப்பி வைக்கப்பட்ட பாடத்தை நோட்டில் எழுதி ெகாண்டிருந்தார். அப்போது பென்சில் கையில் இருந்து தவறியது. அதை பவதாரணி பிடிக்க முயற்சித்தார்.

அப்போது கட்டிலில் இருந்து கீழே விழுந்தார். இதில் பின் தலையில் காயம் ஏற்பட்டது. வலி நிவாரண மருந்து தடவிய பெற்றோர் பவதாரணியை தூங்க வைத்தனர். இரவில் பவதாரணிக்கு அடிக்கடி வாந்தி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆபரேஷன் செய்த ஒரிரு மணி நேரத்தில் பவதாரணி பரிதாபமாக இறந்துவிட்டார். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : The little girl dies in the neck piece Student falls out of bed
× RELATED தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி...